வெந்தயக்கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
சோள மாவு – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
வெண்ணெய் – சிறிதளவு
காய்ச்சிய பால் – 1/2 டம்ளர்
மிளகுப்பொடி – தேவையான அளவு
உப்பு – சிறிதளவுசெய்முறை:
முதலில் வெந்தயக்கீரை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அதற்கு அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி கொள்ளவும்.
மேலும் அதை நன்கு கொதிக்க வைக்கும் போது வெந்தயக்கீரை, பூண்டு, உப்பு, மிளகுப்பொடி ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும்.
காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து எடுத்து, வேகவைத்த கலவையுடன் சேர்த்து
நன்கு கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான வெந்தயக்கீரை சூப் தயார்.
மருத்துவ நன்மைகள்:
வெந்தயக்கீரையில் வைட்டமின் எ, பி ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. உடலிலுள்ள எலும்புகளை உறுதியாக வைக்க உதவுகிறது.
இருமல், கபம், சளி ஆகிய நோய்களை வெந்தயக்கீரை சரி செய்கிறது. வெந்தயக்கீரை மந்தமாக காணப்படுவர்களை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அஜீரணத்தை வெந்தயக்கீரை குறையச் செய்கிறது.