Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசியான குலுக்கி சர்பத்… செய்து பாருங்க…!!!

குலுக்கி சர்பத் செய்ய தேவையான பொருள்கள் :

சப்ஜா விதை         – 2 டீஸ்பூன்
எலுமிச்சை            – 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
இஞ்சி ஜூஸ்        – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்  – 1/4 டீஸ்பூன் (நறுக்கியது)
சோடா                     – 2 கப்
சர்க்கரை                – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள்     – சிறிது

செய்முறை : 

முதலில் சப்ஜா விதையை சிறிது நீரில் 15நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி விட்டு சப்ஜா விதைகளை தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்  ஒரு ஷேக்கரில் ஊற வைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, பச்சை மிளகாய், சோடா, சர்க்கரை சேர்த்து 25 நொடிகள் நன்கு குலுக்கி, பின் அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறினால், குலுக்கி சர்பத் ரெடி.

Categories

Tech |