Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இப்பவே தாலி கட்டுடா” 42 வயது பெண்ணுடன் இல்லறம்….. 24 வயது பிரதீப்புக்கு நேர்ந்த கொடூரம் …!!

42 வயது பெண் ஒருவர் தன்னுடன் வாழ மறுத்த 24 வயது வாலிபரை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் வசிப்பவர் பிரதீப் (24 ). டிரைவர்  வேலை செய்து வரும் இவருடைய வீட்டின் அருகே பிரமிளா (42) என்ற பெண் வசித்து வந்துள்ளார். பிரமிளாவின் கணவன் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், இவர் கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து தனிமையில் வசித்து வந்த பிரமிளாவுக்கு பிரதீப் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார். பின்னர் அவர்களுக்கு இடையில் இருந்த இந்த நட்பு ஒரு கட்டத்தில் நெருங்கிப் பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

இந்த செய்தி பிரதீப் பெற்றோருக்கு தெரியவந்ததால், அவர்கள் வேறு இடத்தில் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து பிரதீப், பிரமிளாவிடம் கூறியபோது தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரமிளா பிரதீப்பிடம், “நீ என்னை விட்டு விட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யக் கூடாது.

எனவே இப்போதே எனக்கு தாலிகட்டி இப்படியே இந்த வீட்டில் ஒன்றாக நாம் வாழ வேண்டும்” என்று வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு பிரதீப் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த பிரமிளா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரதீப் தலையிலும், மார்பிலும் சரமாரியாக வெட்டியதில் பிரதீப் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவருடைய சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து பிரதீப்புக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பிரதீப்பின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |