கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பரிசோதனையில் அமெரிக்க நிறுவனமான மாடர்னா வெற்றியடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது இந்த வைரஸினை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடித்துள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதில் அமெரிக்க நிறுவனமான மாடர்னா கொரோனவுக்கான தடுப்பூசியினை கண்டுபிடித்து மூன்றாம் கட்ட சோதனையில் இருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் சோதனை 94.5% வெற்றியடைந்துள்ளதாக அமெரிக்க நிறுவனமான மாடர்னா அறிவித்துள்ளது. 30 ஆயிரம் பேருக்கு செய்ததில் 94% பயன்பாடு கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்று மருத்துவ குழு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.