மகாராஷ்டிரா மாநிலத்தில் 22 வயது பெண் ஒருவர் ஆசிட் மற்றும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் 22 வயது பெண் ஒருவர் ஆசிட் மற்றும் தீக்காயங்களுடன் அங்குள்ள குவாரி 17 உயிருடன் போராடியபடி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் அவினாஷ் ராஜீர் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். அந்த நபர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால், இந்தப் பெண்ணை கொலை செய்ய நினைத்து தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குள்ள குவாரி ஒன்றிற்கு அழைத்துச் சென்று ஆசிட்டை ஊற்றி, பிறகு பெட்ரோலையும் ஊற்றிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.