48 வயது விவசாயி ஒருவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் Maguindanao பகுதியில் 48 வயதான விவசாயி ஒருவரை 13 வயது சிறுமி திருமணம் செய்யும்படி வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்த நபரின் பெயர் Abdhulrzak. இவருக்கு இது ஐந்தாவது திருமணம் ஆகும். இவருக்கு திருமணம் செய்த சிறுமியின் வயதில் ஒரு குழந்தை ஒன்று உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் இவர் இந்த சிறுமிக்கு 20 வயது ஆன பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று திட்டமிட்திருந்துள்ளார்.
மேலும் ஒரு குழந்தை போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்ய போகிறோமே என்று வருத்தம் அவருடைய முகத்தில் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் Maguindanao பகுதியில், குறிப்பாக இஸ்லாமியர்கள் பெருன்பான்மை கொண்ட பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். குழந்தைகள் குறிப்பிட்ட பருவத்தை அடைந்த பின் திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்த குழந்தை திருமணங்களால் சிறுமிகளின் பொருளாதாரம், கல்வி மற்றும் வாய்ப்புக்கான உரிமைகள் பறிக்கப்படுவதாக லண்டனில் உள்ள பிரச்சார குழு பெண்கள் கேர்ள்ஸ் நாட் பிரைட்ஸ் தெரிவித்துள்ளது.