11 மருத்துவகல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு கிடையாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு அறிவித்திருந்தது. இக்கல்லூரிகளில் சேர நீட் தேர்வுக்கு பதிலாக இனி-செட் என்னும் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் எய்ம்ஸ், ஜிப்மர் பிஜி படிப்புக்கு INI – SET நுழைவுத்தேர்வு என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு என்பது ஓரவஞ்சகத்தின் உச்ச கட்டம் என்றும், INI – SET சட்டத்துக்கு விரோதமானது; மாநில உரிமைக்கும் எதிரான நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.