திருப்பதிக்கு சென்ற தமிழக முதலமைச்சரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்காமல் அவமரியாதை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, கூடுதல் எஸ்பி ஒருவர் நேரில் சென்று வரவேற்றார். ஒரு மாநில முதல்வரை தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்காமல், ஒரு போலீஸ் அதிகாரியை வைத்து வரவேற்றது முறையல்ல.
ஒரு எம்எல்ஏவுக்கு கொடுக்கும் மரியாதை கூட முதலமைச்சருக்கு அளிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி தேவஸ்தான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.