Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கல்யாண வீட்டு சுவையில்… வெஜிடபிள் பிரியாணி ரெசிபி…!!!

வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி         – 1 உழக்கு,
கேரட்                              – ஒன்று,
பீன்ஸ்                            – 5,
முட்டைகோஸ்        – 1/2 (சிறிய அளவு),
காலிஃப்ளவர்              – 1/2 (சிறிய அளவு),
பட்டாணி                      – (உரித்தது) 1/2 கப்,
சோளம்                          – 1,
வெங்காயம்                -1,
பூண்டு                           – 5 பல்,
இஞ்சி                            – சிறிய துண்டு,
மிளகாய்த்தூள்          – 1 டீஸ்பூன்,
மல்லித்தழை            – சிறிதளவு,
புதினா                           – சிறிதளவு,
தேங்காய்ப்பால்       – 1/2 உழக்கு,
முந்திரி                        – 3,
பாதாம்                         – 3,
தக்காளி                       – 2 (நறுக்கவும்),
பட்டை                         – சிறு துண்டு,
கிராம்பு                         – 2,
பிரிஞ்சி                        – சிறிதளவு,
ஏலக்காய்                   – 1,
தயிர்                             – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை        – சிறிதளவு,
மல்லித்தழை           – சிறிதளவு,
நெய்                              – 4 டீஸ்பூன்,
தண்ணீர்                      – 3 டம்ளர்,
எண்ணெய்                 – 2 குழிக்கரண்டி,
உப்பு                              – தேவையான அளவு.

செய்முறை:

பாசுமதி அரிசியை நீரில் ஊறவைத்து களைந்து வைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி, அதில் பாசுமதி அரிசியை லேசாக வறுத்து தனியாக எடுக்கவும்.

பின்  1 சோளத்தை அவியவைத்து முத்துகளாக எடுத்து கொள்ளவும். அதனை அடுத்து கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃப்ளவர் என அணைத்து  காய்கறிகளைச் சிறிய அளவில் நறுக்கி, வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.

அதன்பின் பூண்டு, இஞ்சி, முந்திரி, பாதாமையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். தொடர்ந்து குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் பட்டை, வாசனை இலை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

பின்னர் அதனுடன் தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா, அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கியதும், எண்ணெய் பிரிந்ததும், அதனுடன் தயிர் மற்றும் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் பாசுமதி அரிசியையும், சோள முத்துகளையும் சேர்த்து, உப்பு தூவி நன்றாகக் கலக்கி, இறுதியில்  தண்ணீரையும், தேங்காய்ப்பாலையும் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி, ஆவி வெளியேறியபின் எடுத்துப் பரிமாறவும். இப்போது சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி.

Categories

Tech |