Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதுளை பழத்தினால்…தோல் சருமத்திற்கு…இவ்வளவு நன்மைகளா?

 மாதுளை பழத்தில் சருமத்திற்கான பயன்கள் மிகவும் அதிகமாக உள்ளன.  அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில்  மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்:

மாதுளைபழத்தை  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் ருசித்து உண்ணக்கூடிய பழம். இந்த பழத்தில்  நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய ஒரு நாட்டு மருந்தாகவும் உள்ளது.  மேலும் இந்த  பழம் அதிக ருசி மிகுந்த பழம் என்பதால் அனைவராலும் உண்ண கூடியது.

மாதுளை பழத்தில் இருக்கும் ஒருசில   மருத்துவ குணங்கள்: 

மாதுளம் பழத்தில் எண்ணற்ற நன்மைகளை உள்ளது. இந்த பழமானது சரும அழகைக் கூட்டுவதிலும் , கூந்தல்,  உடலுக்கு ஆரோக்கியம் தருவதிலும்முக்கிய பங்கு வகிக்கிறது.

 ‍சருமத்திற்கானப் பயன்கள்:

பொதுவாக  ஆரோக்கியமான சருமம் என்பது அழகாக இருப்பது மட்டுமல்ல நோய்தொற்றிலிருந்து பாதுகாப்பதை  தான் ஆரோக்கியமான சருமம் எனலாம் மாதுளைப் பழத்தில்  “உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புகளைக் கொண்டிருப்பதனால், அந்த பழத்தை  பயன்படுத்துவதால் பிரகாசிக்கும்,  பொலிவான சருமத்தை தருகிறது.

 தோல் அழற்சிலிருந்து பாதுகாக்கிறது:

மாதுளைப் பழத்தை  தோல் அழற்சிக்காக  மிகவும் பயனுள்ளதாக உள்ளது.  இதில்  பாலிபினால்கள், பல சேர்மங்கள் நிறைந்து உள்ளதால்   சிறிய வெட்டுக்கள் மற்றும் காயங்களைக் குணப்படுத்த உதவுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில்  மாதுளைப் பழத்தின் சாற்றினை  தடவி வந்தால் விரைவில் குணப்படுத்துகின்றன. எனவே தோல் அழற்சியினைக் குணப்படுத்துவதில் மாதுளைப் பழத்தின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

 உலர்ந்த  சருமத்திற்கு தீர்வு:

வறண்ட சருமம் உள்ள பெண்களுக்கு மாதுளைப் பழமானது  பிரசாதமாக கிடைத்திருக்கிறது. மாதுளை பழத்தின் விதைகள் தோலில் ஊடுருவி செல்லும் என்பதால்  எளிதில் சென்று ஆக்சிஜனேற்றம் அடைய வழிசெய்கிறது. மேலும் இது உலர்ந்த மற்றும் சீரற்ற தோலுக்கு அழகு சேர்க்கிறது. எனவே இது  சருமத்திலிருந்து ஈரப்பதம் வெளியேறுவதைத் தடுத்து ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

 பாக்டீரியா எதிர்ப்பு:

மாதுளைப் பழத்தில் ப்யூனிசிக் அமிலம் (Punicic acid) உள்ளது. இந்த அமிலமானது பாக்டீரியாவைத் தொடர்ந்து நீக்கி விடும். மேலும் நாள் முழுவதும் ஈரமான மற்றும் ஆரோக்கியமான சருமம் இருபதை உறுதி செய்கிறது. இப்பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு (Antibacterial) இருப்பதால் பாக்டீரியாவின் தொற்றிலிருந்து முழுமையாகச் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.

 வயதான தோற்றத்திற்கான எதிர்ப்பு:

 

மாதுளை வயதான தோற்றத்திற்கானப் பண்புகளை, தோலின் உட்புறமும், வெளிப்புறமும் புத்துணர்ச்சி ஊட்டுவதின் மூலம் எதிர்க்கிறது. சூரிய ஒளியில் நமது உடலின் தொடர்ந்து வெளிப்படுவதன் காரணமாக ஏற்படும் வயதான தோற்றாத்திற்கான அறிகுறிகளைக் குறைப்பதன் மூலம் முன்கூட்டிய வயதான தோற்றத்திலிருந்து நம்மை நல்ல உணவுகள் பாதுகாக்கின்றன. எனவே மாதுளை சருமத்திற்கு அழகு சேர்க்கும் கொலஜனை பராமரிக்க உதவுகிறது. மேலும் நம்முடைய சருமத்தினை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைக்கிறது.

 இயற்கையான முகத் தேய்ப்பான்:

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட முகத்தேய்பான்களை விட மாதுளம் பழத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட முகத் தேய்ப்பான் மிக நல்ல பயன்களைக் கொடுப்பதோடு எந்தவித பக்கவிளைவுகளையும் தருவதில்லை.முகத்தின் தோலிற்கு மாதுளைப் பழத்தினை முகத் தேப்பானாக பயன்படுத்தலாம்.

செய்முறை:

ஒரு தேக்கரண்டி மாதுளைப் பழ விதைகள், பழுப்பு சர்க்கரை ஒரு தேக்கரண்டி, இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆனைக்கொய்யா எணணெய் (Avocado oil) பயன்படுத்தி முதக் தேப்பானை உருவாக்கலாம்.

இந்த முதக் தேய்ப்பானைத் தினமும் பயன்படுத்துவதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்பட்டு சுத்தமான மற்றும் ஒளிரும் சருமத்தினை ஒரு சில நிமிடங்களில் பெறலாம். உடற்சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைப் போக்குவதற்கு மாதுளம் பழத்தின் விதைகளை அரைத்து உடல் தேய்ப்பானாகப் பயன்பத்தலாம்.

மாதுளை பழத்தின் மூலம் மென்மையான சருமம்:

மாதுளைப் பழத்தில் இரும்புச் சத்து அதிக அளவு ‌ உள்ளது.  இந்த பழத்தில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் பகுதிப் பொருளாக இருப்பதால், ஆக்சிஜனின் செல்ல  உதவுகிறது. ஆக்சிஜன் அனைத்து சரும உயிரணுக்களையும் சென்றடைவதினால் சருமம் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளைமையாகவும் இருக்க உதவியாக இருக்கிறது.

Categories

Tech |