Categories
சினிமா தமிழ் சினிமா

“யாரவது எனக்கு உதவுங்க” புற்று நோயால் துவண்ட தவசி…. 1,00,000 கொடுத்த விஜய் சேதுபதி….!!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற காமெடியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தவசி. மீம்ஸ்களின் மூலம் பலர் மனதில் பதிந்த அவரது முகம் தற்போது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உணவு குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். அவர் தனக்கு உதவ வேண்டி மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்நிலையில் சரவணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு இலவசமாக சிகிச்சை கொடுக்கப்படும் என திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது நடிகர் விஜய் சேதுபதி தவசிக்கு உதவும் பொருட்டு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் சௌந்தரராஜா 10,000 ரூபாய் நிதியுதவி கொடுத்துள்ளார். இதனிடையே சிவகார்த்திகேயன் 25000 சூரி 20,000 நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |