அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
கனமான அவல் – 1 உழக்கு,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 2,
கேரட் – 1/2,
உருளைக்கிழங்கு – 1/2,
வெங்காயம் – 1/2,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு – 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
முதலில் அவலை சுத்தம் செய்து ஊற விடவும். பின்பு கேரட் மற்றும் உருளைக்கிழங்கைத் தோல் சீவி நன்கு துருவிக் கொள்ளவும்.
பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதனோடு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து, பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன் துருவிய கேரட், உருளைக்கிழங்கைச் சேர்த்து வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு மற்றும் அவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கினால் சுவையான அவல் உப்புமா ரெடி.