Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பிரியாணிக்கு ஏத்த சைடிஷ்… கேரட் தயிர்ப் பச்சடி…!!!

கேரட் தயிர்ப் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:

கேரட்                                – 2,
தக்காளி                           – ஒன்று (நறுக்கியது),
தயிர்                                  – ஒரு கப்,
தேங்காய்த்துருவல்  – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய்           – 2 (நறுக்கியது),
மல்லித்தழை                – சிறிதளவு (நறுக்கியது),
கறிவேப்பிலை             – சிறிதளவு (நறுக்கியது),
எண்ணெய், உப்பு         – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு                                  – கால் டீஸ்பூன்,
பெருங்காயம்                – சிறிதளவு,
காய்ந்த மிளகாய்         – ஒன்று.

செய்முறை:

கேரட்டைக் சுத்தம் செய்து தோல் சீவி, மெல்லியதாகத் துருவிக் கொள்ளவும். அதனுடன்  தக்காளி, தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, தயிர் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.

பின்பு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதனுடன் கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, கலவையில் சேர்த்துப் பரிமாறவும். இப்போது சுவையான கேரட் தயிர் பச்சடி தயார்.

Categories

Tech |