தேவையான பொருட்கள்:
பால் – ஒரு லிட்டர் கருப்பட்டி – 200 கிராம்.
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் பாலை ஊற்றி, பால் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். கருப்பட்டியைப் பொடித்து, தண்ணீரில் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு கரைத்த தண்ணீரை வடிகட்டி, சுண்டிய பாலோடு சிறிதளவு சிறிதாக ஊற்றவும். பின் நன்கு திரண்டு வரும் போது அதனை கரண்டியால் அதிகம் கிளற வேண்டாம். இறுதியில் தீயை மிதமாக வைத்து நன்கு சுண்டியதும் இறக்கவும். இப்போது சுவையான திரட்டுப்பால் தயார்.