முட்டை பிரியாணி செய்ய தேவையான பொருள்கள் :
பச்சை மிளகாய் – 3
முந்திரி – 8
பட்டை, லவங்கம், ஏலக்காய் – ஒன்றிரண்டு
இஞ்சி, பூண்டு – தேவைக்கு
தேங்காய் – பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
நெய்,எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 3
உப்பு – தேவையான அளவு
அரிசி – 1 கப்
முட்டை – 4
முந்திரி – 8
பட்டை, லவங்கம், ஏலக்காய் – ஒன்றிரண்டு
இஞ்சி, பூண்டு – தேவைக்கு
தேங்காய் – பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
நெய்,எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 3
உப்பு – தேவையான அளவு
அரிசி – 1 கப்
முட்டை – 4
செய்முறை :
முதலில் அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து வைக்கவும். அரிசியை ஊற வைத்து முக்கால் பாகம் வேக வைத்து வைக்கவும். முட்டையை உடைத்து ஊற்றி மஞ்சள் கலந்து நன்றாக அடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி குக்கரில் வைத்து வேக விட்டு எடுக்கவும். பின்பு பனீர் துண்டுகள் போல் வெட்டி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன் பின் நன்றாக வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். பின் இதனுடன் துண்டுகளாக்கிய முட்டை, முக்கால் வெந்த சாதம் சேர்த்து கலந்து கொத்தமல்லி தூவி தம் போட்டு 3௦ நிமிடம் வைக்கவும். முழுவதும் வெந்ததும் நன்றாக கலந்து விட்டு எடுத்தால் முட்டை பிரியாணி ரெடி.