மசாலா பட்டாணி சாதம் செய்ய தேவையான பொருள்கள் :
பச்சரிசி -ஒரு கப்
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 3
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
பட்டாணி – கால் கப்
தேங்காய் துருவல் -ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு -3 பல்
சோம்பு -அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள்.
அதன் பின் எண்ணெயைக் காயவைத்து கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் சிறிது உப்பு, பட்டாணி சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள்.
அடுத்தது தக்காளி, மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வடித்த சாதம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள். குழந்தைகளின் லன்ச்சுக்கு செய்து அனுப்பினால், விருப்பமாகச் சாப்பிடுவார்கள்.