உத்திரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை மூட நம்பிக்கைக்காக பெற்றோர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் தீபாவளியன்று குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்ற மூட நம்பிக்கைக்காக பரசுராம் என்பவரும், அவரின் மனைவியும் தங்களின் 6 வயது சிறுமியை கொன்று, குழந்தையின் உடலிலிருந்து நுரையீரலை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி கொலை செய்வதற்கு முன்னர் பரசுராமன் நண்பர்கள் அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.