Categories
மாநில செய்திகள்

“ஸ்கூல்ல டீச்சர் சொன்ன கதை” இப்போ இந்த பறவை நிஜமாக்கிருக்கு…!!

பறவை ஒன்று பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிப்பதற்காக கல்லை எடுத்து போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நாம் பள்ளிக்கூடம் படிக்கும் காலங்களில் காகம் ஒன்று பானையில் கல்லைப் போட்டு தண்ணீர் குடிக்கும் கதையினை ஆசிரியர் சொல்ல கேட்டிருப்போம். அந்த கதையை தற்போது ஒரு பறவை இது குறித்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிளாஸ்டிக் பாட்டிலில் ஒன்றில்  தண்ணீர் இருக்கிறது.

அதை குடிக்க முயலும் சிறு பறவை ஒன்று பாட்டிலில் உள்ள தண்ணீரை மேலே கொண்டு வருவதற்காக சிறிய கற்களை எடுத்து பாட்டிலுக்குள் போடுகிறது. அதன் பின்னர் தண்ணீர் மேலே வந்தவுடன்  பறவை தண்ணீரை குடிக்கிறது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.[

Categories

Tech |