Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்…! மகிழ்ச்சி வெளிப்படும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! மனதில் இருந்த தயக்கம் விலகி செல்லும்.

பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணி பரிவர்தனை திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவரின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பின் நீங்கும். குழந்தைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். உறவினர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள் யாரையும் நம்ப வேண்டாம்.

காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கையாள வேண்டியிருக்கும். மாணவச் செல்வங்கள் முயற்சிகளை எடுத்து நல்லபடியாக படிக்க வேண்டும். குல தெய்வத்தை மனதில் நினைத்து அந்த நாளை பூர்த்தி செய்ய வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவபெருமான், பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் வெள்ளை நிறம்.

Categories

Tech |