தனுசு ராசி அன்பர்களே…! எதார்த்த பேச்சு பிற மனங்களை சங்கடப்படுத்தும் நிலையில் இருக்கும்.
நீங்கள் எவ்வளவு சாமர்த்தியமாக பேசினாலும் அதில் குறைகளை கண்டுபிடித்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாக இருக்கும். எதிரிகளின் தொல்லை கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். சொத்தின் பேரில் கடன் வாங்கும் சூழ்நிலை இருக்கும். ஏதோ ஒரு விஷயம் தேவையில்லாமல் மனதை உறுத்திக்கொண்டே இருக்கும்.தேவையில்லாமல் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கூடும். காரியங்களைக் கைகூட வைக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாடாகவே அமையும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். மேற்கல்விகளுக்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீலம் நிறம்.