பசலைக்கீரை வெஜ் மிக்ஸ் சாலட் செய்ய தேவையான பொருட்கள்
பசலைக்கீரை – 200 கிராம்
காளான் – 100 கிராம்
வெங்காயம் – 1 பெரியது
தேங்காய் எண்ணெய் – 1 மேஜைக் கரண்டி
முட்டைகோஸ் – 100 கிராம்
கேரட் – 1
சீரகம் – 1 தேக்கரண்டி ,
மிளகாய் – 2,
சோம்பு – 1 தேக்கரண்டி ,
குடைமிளகாய் – 1 ,
உப்பும், இஞ்சியும் – தேவைக்கு.
செய்முறை:
பின்பு இஞ்சியை எடுத்து சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், அரைத்த இஞ்சி விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய மிளகாயை, சீரகம், சோம்பு கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய், காளான் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டி நன்கு கிளறி விட்டு நன்கு வதங்கிய பின்பு, பசலைக் கீரையையும், உப்பையும் சேர்த்து கிளறவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி, நறுக்கிய முட்டைகோஸ்,கேரட்,குடை மிளகாய், வெங்காயம், காளான், போட்டு சிறிது கிளறி மூடிவைத்து வேக விட்டு இறக்கினால் சுவையான பசலைக்கீரை வெஜ் மிக்ஸ் சாலட் ரெடி.