Categories
உலக செய்திகள்

“சிறுநீர் கழித்ததும் வலி” ஸ்கேன் பரிசோதனைக்குப்பின்…. வாலிபர் வாழ்க்கையே மாறிய அதிசயம்…!!

சிறுநீர் கழித்தபின் வலி ஏற்பட்டதால் மருத்துவரிடம் சென்ற வாலிபர் பரிசோதனைக்கு பிறகு பெண்ணாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மிக்கி சேனல்(18) என்பவர் ஆணாக பிறந்து வளர்ந்துள்ளார். இவருக்கு சில சமயம் தான் ஒருவேளை திருநங்கையோ என்ற எண்ணம் அவ்வப்போது மனதில் வந்து போயிருக்கிறது. இந்நிலையில் திடீரென்று ஒருநாள் இவருக்கு சிறுநீர் கழித்த பிறகு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து மிக்கியை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அவருடைய வயிற்றுக்குள் கருப்பை மற்றும் கர்ப்பப்பை என பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருந்துள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள் மிக்கியிடம் ஸ்கேன் ரிப்போர்ட்டினை காட்டியுள்ளனர். மேலும் மிக்கியிடம் அறுவை சிகிச்சை மூலமாக வயிற்றிலுள்ள பெண் இனப்பெருக்க உறுப்புகளை அகற்றி விடலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் மிக்கி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஏனெனில் சிறு வயதில் இருந்தே ஆணாக உணராத மிக்கிக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். இந்நிலையில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று மகிழ்ச்சி அடைந்த மிக்கி செயற்கை கருத்தரித்தல் மூலம் கர்ப்பம் அடைந்துள்ளார். மேலும் அவருக்கு பெண்ணுறுப்பு இல்லை என்பதால் அறுவை சிகிச்சை முறையில் தான் குழந்தை பிறக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தன்னை அவள் என்று அழைத்தால் மட்டுமே பிடிக்கும் மிக்கி இப்போது தான் ஒரு முழு பெண்ணாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |