Categories
உலக செய்திகள்

துப்பாக்கி பயன்படுத்த தடை…. இந்திய ராணுவத்தினரை கலங்கடித்த சீனா…. கையாண்ட கொடூர வழி…!!

இந்திய வீரர்களை எல்லையிலிருந்து துரத்த சீனா அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே  இமயமலை எல்லை பகுதியில் தற்போது சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இமயமலை பகுதியிலிருந்து இந்திய ராணுவத்தினரை விரட்ட சீன ராணுவம் பயங்கர ஆயுதம் ஒன்றை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சீனா அந்த தடையை மீறாமல் இந்திய ராணுவ வீரர்களை துரத்தியதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார். சீனா பயன்படுத்திய அந்த மின்காந்த ஆயுதமானது எதிரிகளின் உடலில் ஊடுருவி மனித திசுக்களை மொத்தமாக சிதைக்கும்.

இதனால் பாதிக்கப்பட்ட நபர் வாந்தியில் தொடங்கி உடல் முழுவதும் அதிக வெப்ப நிலைக்குத் திரும்பும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த மின்காந்த ஆயுதத்தை சீனா கடந்த ஆகஸ்ட் மாதம் எல்லையில் நடந்த சண்டையின்போது இந்திய ராணுவத்தினர் மீது பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே இரு நாட்டு வீரர்களும் நேருக்கு நேர் கைகளாலும், கற்களை எடுத்து வீசியும் மோதியுள்ளனர். இந்த மின்காந்த ஆயுதத்தை சீனா பயன்படுத்திய 15 நிமிடங்களிலேயே இந்திய இராணுவ வீரர்கள் வரிசையாக வாந்தி எடுக்கத் தொடங்கியதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து இந்திய வீரர்களால் சண்டையிட முடியவில்லை என்பதால் அங்கிருந்து உடனடியாக மொத்த இந்திய வீரர்களும் வெளியேறியதாக தெரிவித்துள்ளார். மேலும் மலையின் உச்சி பிரதேசத்தில் இந்திய வீரர்கள் சடையிடுவதில் சிறந்தவர்கள்.

எனவே இந்திய வீரர்களுடன் மோதுவது இழப்பை ஏற்படுத்தும் என்று நினைத்த சீன ராணுவம் அந்த மின்காந்த ஆயுதங்களை பயன்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து உலகிலேயே முதன்முறையாக மின்காந்த ஆயுதத்தை எதிரி நாட்டின் மீது பயன்படுத்தியது சீனா மட்டும் தான் என்று பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |