Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவருக்கு பிரான்சில் கிடைத்த அங்கீகாரம்… பெருமிதம் அடைந்த துணை முதல்வர்…!!

பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்க அங்கீகாரம் கிடைத்துள்ளதால் தமிழக முதலமைச்சர் பெருமிதம் அடைவதாக கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் வோவாராயல் தமிழ் கலாச்சார மன்றம் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் இரண்டும் இணைந்து  நடத்திய “முத்தமிழ் விழா 2020” விழாவுக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனரான அன்புச்செழியன் தலைமை தாங்கியுள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு காணொலிக் காட்சி மூலமாக பேசியுள்ளார். அதில், “தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல, அது நம்முடைய வாழ்வின் வழி, நம்முடைய அடையாளம். உலக மொழிகளுக்கெல்லாம் உயர் மொழியான தமிழ் மொழி நம்முடைய அன்னை ஆகும்.

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என பழந்தமிழர்கள் மூன்று சங்கங்கள் அமைத்து வளர்த்த தமிழை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புதுமையான திட்டங்களாக செயல்படுத்தி தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். மேலும் முதலமைச்சர் எம்ஜிஆரால் தான் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு கோடி ரூபாய், தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்குவது போன்றவை ஆரம்பிக்கப்பட்டது. அம்மா ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 55 விருதுகள், எம்ஜிஆர் ஆட்சியில் நான்கு விருதுகள், தற்போது ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் ஆட்சியில் 74 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது உலக தமிழ்ச் சங்கம் மீண்டும் புதுமைப்படுத்தப்பட்டு 40 கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. எம்ஜிஆர் பெயரில் கட்டப்பட்ட புதிய நூலகத்தில் 1.5 லட்சம் நூல்கள், பாதுகாப்பு மையம், சமூகப்பணி ஆய்விருக்கை, வருடந்தோறும் சிறந்த நூல்களுக்கான பரிசு ஆகியவை வழங்கப்படுகின்றன.

வோவாராயல் தமிழ் கலாச்சார மன்றம் அந்நகரில் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதை கண்டு நான் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளேன். இந்த மன்றத்தின் தமிழ் வளர்ச்சிப் பணி இன்னும் சிறப்புடன் மேலோங்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.

Categories

Tech |