Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்… மருத்துவரின் அசத்தல் திறமை… குவியும் பாராட்டு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயது சிறுவன் விளங்கிய ஒரு ரூபாய் நாணயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா ஹரிதாரி மங்கலம் கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ஐந்து வயதில் வேலு என்ற மகன் இருக்கிறான். அவன் நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி இருக்கிறான். அதனைக் கண்ட வேலுவின் பெற்றோர் சிறுவனை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அனைவரும் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை செய்தனர். நுண்கதிர் பரிசோதனையில் சிறுவனின் தொண்டை பகுதியில் நாணயம் சிக்கி இருப்பது தெரியவந்தது.

அதன் பிறகு இரவு 7 மணிக்கு சிறுவனுக்கு திரும்பவும் பரிசோதனை செய்யப்பட்டு, அறுவை சிகிச்சை இல்லாமல் எஸ்டோஸ்கோப் மூலம் சிறுவன் விளங்கிய நாணயத்தையும் மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர். அதன் பிறகு சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த சிறுவன் தற்போது நலமாக இருக்கிறான். அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுவன் விழுங்கிய நாணயத்தை அகற்றிய மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Categories

Tech |