Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருமுறை கலைந்த கர்ப்பம்… வாரிசு கிடைக்காதா?, மனவேதனை அடைந்த தம்பதி… வீட்டில் நடந்த கொடூரம்…!!!

நாகை அருகே இருமுறை கர்ப்பம் கலந்ததால் மனவேதனை அடைந்து தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகையை அடுத்துள்ள பாப்பாகோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை சேர்ந்த தங்க மாரியம்மாள் என்ற பெண்ணை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தங்க மாரியம்மாள் இரு முறை கர்ப்பம் அடைந்தார். ஆனால் இரு முறையும் கர்ப்பம் கலைந்துவிட்டது. அதனால் தம்பதியினர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். தங்களுக்கு ஒரு வாரிசு கிடைக்காதா? என்ற வேதனையில் இருந்த இருவரும் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.

அவர்கள் இருவரும் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஒரு அறையில் மின் விசிறியில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தூக்கில் தொங்குவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மாரியப்பன் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே பரிதாபமாக உயிரிழந்தார். தங்க மாரியம்மாள் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |