செங்கல்பட்டு மாவட்டத்தில் நடிகை குஷ்பு சென்றுகொண்டிருந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
பாஜக ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடிகையான குஷ்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்று கொண்டிருந்த கார் (இன்று) திடீரென முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் குஷ்பூ லேசான காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து கடலூருக்கு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக குஷ்பூ காரில் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.