Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சோள மாவு புட்டு … செய்து பாருங்கள் …!!!

சோள மாவு புட்டு செய்ய தேவையான பொருள்கள் :

சோளக்குருணை       – 1 கப்
அரிசி மாவு                   – 1/4 கப்
தேங்காய்த்துருவல் – 3/4 கப்
பொடித்த வெல்லம் – 3/4 கப்
முந்திரி                          – 3 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை            – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு                                – 1 சிட்டிகை
ஏலக்காய்தூள்          – 1/4 டீஸ்பூன்
நெய்                               – சிறிது

செய்முறை : 

முதலில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு செய்யவும். மக்காச்சோளத்தை காயவைத்துச் சற்று கரகரவென நொய் போல் உடைக்கவும்.

அதன் பின் அரிசி மாவையும், சோளக்குருணையையும் சூடான கடாயில் லேசாக வறுத்து, உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக அதில் சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலக்கி நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

அடுத்து  மாவுகளைக் கட்டியில்லாமல் உதிர்த்துப் பரப்பி ஆவியில் வேகவிடவும்.கெட்டிப் பாலில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து, வெந்த மாவில் சிறிது சிறிதாகப் போட்டுக் கலந்து நெய் சேர்த்து பிசறி கட்டியில்லாமல் உதிர்த்து முந்திரி, வேர்க்கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து கலக்கவும். சுவையான சோள புட்டு தயார்.

Categories

Tech |