தமிழகம் முழுவதிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பில் சேர்க்கை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2019-2020 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி வெளியாகியது.
இந்த நிலையில் தற்போது 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவதாக பல புகார்கள் எழுந்தன. அதனால் தமிழக அரசு பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.