Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான குஸ்கா … செய்து பாருங்கள் …!!!

குஸ்கா செய்ய தேவையான பொருள்கள் :

பாசுமதி அரிசி                            – 2 கோப்பை
எண்ணெய் & வெண்ணெய் -6 தேக்கரண்டி
பட்டை                                           – 2
பச்சை மிளகாய்                        – 2
பெரிய வெங்காயம்                 – 2
உப்பு                                                – தேவையான அளவு
தயிர்                                               – 3 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை          – 3 மேசைக்கரண்டி
புதினா                                           – 9 இதழ்
கடலைப் பருப்பு                      – கால் கோப்பை
கிராம்பு                                         – 2
இஞ்சி பூண்டு விழுது           – 2 தேக்கரண்டி
தக்காளி                                      –  2
மஞ்சள் தூள் ‍                           – 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம்                   – அரை பழம்
செய்முறை :

முதலில் அரிசி மற்றும் கடலைப் பருப்பை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி குக்கரில் எண்ணெய் மற்றும் வெண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடிக்க விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயத்தை சிவக்க விட வேண்டாம். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன் பின் பச்சை வாடை அடங்கியதும் தக்காளியை நான்காக வெட்டி சேர்த்து மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கொத்துமல்லி, புதினா, மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும். 1 கோப்பை அரிசிக்கு ஒன்றரை குவளை தண்ணீரும், கால் கோப்பை பருப்பிற்கு அரை குவளை தண்ணீரும் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து அரிசி குக்கரில் வேக விடவும்.. சாதம் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான குஸ்கா ரெடி.

Categories

Tech |