சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் முடிவடைந்து விடுதலை செய்யப்படுகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வரை அனுபவிக்க வேண்டும் என்றும் கர்நாடக சிறைத்துறையில் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் என்பதால் சலுகைகளை பெற்று முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை சசிகலா என்று செலுத்துகிறார். பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்துவதற்கு சசிகலா வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கின்ற சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் முடிவடைகிறது.