குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலத்தில் வதோதரா மாவட்டம் வகோடியா கிராசிங் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. அந்தக் கொடூர விபத்தில் ஒரு லாரியின் முன்புறம் முற்றிலும் சிதைந்தது. அந்த லாரியில் பயணித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த கொடூர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.