முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஒருவர் மீன் சாப்பிடுவதால் கொரோனா பரவாது என்று பேட்டியளித்துள்ளார்.
உலகம் முழுவதும் தற்போது பயங்கரமான கொரோனா வைரஸ் பரவி கொலைவெறி கொண்டு மனித உயிர்களை பலி வாங்கி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அது ஏற்படுத்திய தாக்கம். முன்பு காலத்தில் உலகில் கொள்ளை நோய்கள் பல வந்துள்ளன. ஆனால் அவை பொருளாதாரத்தை பாதித்து மக்களின் வயிற்றில் அடிக்கும் அளவிற்கு செல்லவில்லை. ஆனால் இந்த கொரோனா நோயின் தாக்கம் ஏற்றுமதி-இறக்குமதி, விற்பனை, உறவுகள், நட்பு, பாசம் என வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் மத்திய சந்தை ஒன்றில் ஏற்பட்ட கொரோனா பரவலை தொடர்ந்து பல இடங்களுக்கு தொற்று பரவியதால் நாட்டில் மீன் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த Dilip Weddaraachchi(63) ஊடகவியலாளரை சந்தித்து பேசியுள்ளார். அதில், மக்கள் மீன் சாப்பிட வேண்டும் என்று ஒரு கோரிக்கையை முதலில் வைக்கிறேன்.
மீன் சாப்பிடுவதால் கொரோனா வராது. அதை காட்டுவதற்காக நான் இப்போது இங்கு ஒரு மீன் வாங்கி வந்துள்ளேன் என்று கூறி பச்சையாகவே அந்த மீனை கடித்து சாப்பிட்டு உள்ளார். இந்தக் கொரோனா பரவலினால் நாட்டில் மீன்பிடிப்பவர்களால் மீனை விற்க முடியவில்லை. மேலும் மக்கள் மீன் சாப்பிடாததால் அவர்கள் மீனை விற்க முடியாமல் கடனில் மூழ்கி உள்ளார்கள். நாட்டில் மீன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என்ற ஆதங்கம் அவரது பேச்சில் தெளிவாக தெரிந்துள்ளது. இதேபோன்று பிரித்தானிய உணவு தரக்கட்டுப்பாட்டு ஏஜென்சியும் உணவு மூலம் கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்று கூறியுள்ளது.