Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அண்ணாச்சி பழம் இருக்கா… கவலை வேண்டாம்… சுவையான கீர் செய்யலாம் ..!! 

அண்ணாச்சி பழம் கீர்  செய்ய தேவையான பொருள்கள்:

அண்ணாச்சி பழம்              – அரை கப்
ரவை                                         – 100 கிராம்
சர்க்கரை                                 – 150 கிராம்
குங்குமப்பூ                             – 1 சிட்டிகை
பால்                                          – அரை லிட்டர்
நெய்                                          – 2 டீஸ்பூன்
எண்ணெய்                             – 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு,  பாதாம்  – 5

செய்முறை: 

முதலில்அன்னாசி பழத்தை எடுத்து தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது  நெய்யை  ஊற்றி ரவையை போட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது பாலை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கியபின் குங்குமப்பூவை போட்டு கரைத்து வைக்கவும்.

மேலும் பாதம், முந்திரிபருப்பை  எடுத்து நன்கு  துருவி எடுத்ததும்,அடுப்பில் வாணலியை வைத்து   அதில் வெண்ணெய் ஊற்றியதும் துருவிய பாதம்,முந்திரி பருப்பை போட்டு நன்கு வறுத்து எடுத்து  கொள்ளவும்.

மற்றோரு  வாணலியை அடுப்பில் வைத்து அதில்தேவையான அளவு பாலை ஊற்றி  கொதிக்க வைத்ததும் அதனுடன் வறுத்த ரவையை சேர்த்து  நன்கு கிளறவும்.

அதன் பின்பு  தேவையான அளவு  சர்க்கரையை சேர்த்து கரைந்ததும் பதம் வந்தவுடன், கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைஅதில்  ஊற்றவும்.

அத்துடன் சிறு துண்டுகளாக நறுக்கிய அன்னாசிப்பழம் சேர்த்து கிளறி சில நிமிடத்திற்கு பின் வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் தூவி பரிமாறவும்.

Categories

Tech |