கணவர் ஒருவர் தன் மனைவியை அடித்து கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தோட்டமேலக்காடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ரமேஷ் – சாந்தம்மா. ரமேஷ் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதில் ரமேஷ் கோபத்தில் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதில் சாந்தம்மா கீழே மயங்கி விழுந்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராத ரமேஷ் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பித்து சென்றுள்ளார். இந்நிலையில் ரமேஷ் தப்பியோடியதைக் கண்ட பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாந்தம்மாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.