தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது”.