எந்த விபத்தும் என்னை தடுத்து நிறுத்த முடியாது, கடவுள் முருகன் துணை இருக்கிறார் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். அவர் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து கடலூருக்கு தனது கார் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. அதன் பிறகு அவர் வேறொரு காரில் கடலூர் சென்றடைந்தார். இந்நிலையில் இந்த விபத்து பற்றி குஷ்பூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எந்த விபத்தும் தன்னை தடுத்து நிறுத்த முடியாது. முருகன் அருளால் தான் மாற்று காரில் யாத்திரையில் கலந்து கொள்ள சென்று கொண்டிருக்கிறேன்.
என் உடல் நலம் பற்றி விசாரித்த அனைவருக்கும் நன்றி. யாத்திரையை நடத்துவதற்கு தொடர்ந்து தடை வந்தாலும் யாத்திரையைத் தொடர்ந்து நடத்துவேன். கடவுள் முருகன் தான் எங்களை காப்பாற்றி உள்ளார். என் கணவர் வணங்கும் தெய்வம் எங்களை கைவிடவில்லை. நான் மரணத்தை தாண்டி வேறு யாத்திரையில் பங்கேற்று உள்ளேன். எது நடந்தாலும் நம்முடைய நோக்கம் ஒன்றுதான். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியடையும்” என்று அவர் கூறியுள்ளார்.