Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரா கோவிலில் சாணியடி திருவிழா …!!

ஈரோடு மாவட்டம் கும்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற சாணியடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் சாணத்தை அடித்துக் கொண்டாடினர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரா கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து மூன்றாம் நாள் சாணியடி திருவிழா நடைபெறும். அதன்படி வினோத திருவிழா இன்று மாலை தொடங்கியது. திருவிழாவில் பீரேஸ்வரா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கோவிலின் முன்பு மாட்டு சாணத்தை கொட்டி வைத்து அதனை உருண்டைகளாக்கி ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து திரு விழாவை கொண்டாடினர்.

இந்த வினோத திருவிழாவை காண ஆண்டுதோறும் தமிழக மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உள்ளூர் மக்கள் மட்டுமே இத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

Categories

Tech |