Categories
மாநில செய்திகள்

லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு வர்த்தக தடை விதித்தது நிதியமைச்சகம் …!!

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை தலைமையிடமாக கொண்ட லட்சுமி விலாஸ் வங்கி கடந்த ஓராண்டாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நிதி பிரச்சனைகளை சமாளிக்க இந்தியா புல்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் கை கோர்க்க திட்டமிட்ட நிலையில் ரிசர்வ் வங்கி அனுமதி மறுக்கப்பட்டது. லட்சுமி விலாஸ் வங்கி மேலும் சிக்கலில் சிக்கி தவித்து வந்தது.

இந்த நிலையில் லட்சுமி விலாஸ் வங்கிக்கு இன்று மாலை 6 மணி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை வர்த்தக தடை விதித்து நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டனர். அதன்படி ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |