அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் சீனாவையும், இந்தியாவையும் சேர்ந்தவர்கள் என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகவளின் படி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 11.7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 5.8 லட்சம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் சீனாவை கணக்கிடும் போது 49.5 சதவீதம் மாணவர்கலும் பயின்று வருகின்றனர்.
மேலும் இந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 75 சதவீதம் மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்புகளும், 11 சதவீதம் மாணவர்கள் இளநிலை படிப்புகளும், 10 சதவீதம் மாணவர்கள் முனைவர் பட்ட படிப்புகளும் பயின்று வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.