துருக்கியில் 25 அடி உயர ராட்சத பலூன் டைனோசர் கின்னஸ் சாதனை படைத்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
துருக்கியில் பலூன்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ராட்சச டைனோசர் பொம்மை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு லட்சத்து 50 ஆயிரம் பொருள்களைக் கொண்டு இஸ்தான்புல் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த 25 அடி உயர பலூன் டைனோசர் கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அது மக்கள் பார்வைக்காக வணிக வளாகம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அங்கு வரும் மக்கள் ஆச்சரியத்துடன் அந்த பலூன் டைனோசரை கண்டு செல்கிறார்கள். இதுவரை இதுபோன்ற சாதனையை எந்த நாடும் படைத்தது இல்லை. பலூன் டைனோசர் கின்னஸ் சாதனையை படைத்து துருக்கி மிகப்பெரிய பெருமையை பெற்றுள்ளது.