அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்னும் கட்சியைத் தொடங்கியுள்ளார். அந்தக் கட்சி தொடங்கிய நாளில் இருந்து பல்வேறு பிரச்சனைகள். நடிகர் விஜய் தனக்கும் இந்த கட்சிக்கும் தொடர்பு இல்லை, இதில் எனது ரசிகர் யாரும் சேர வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனால் தந்தைக்கும் மகனுக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த விஜய் ரசிகர் மன்ற தலைவர் பத்மநாபன் இன்று திடீரென தனது பொறுப்பிலிருந்து விலகினார். இதற்கு முன்னதாக பொருளாளர் பொறுப்பிலிருந்து விஜய் தாய் சோபா விலகினார். இப்படி கட்சி ஆரம்பிக்கப்பட்டு சில தினங்களிலேயே கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவராக விலகிச் செல்கிறார்கள்.