ஆத்திகுளம் அருகில் கண்மாயில் குளிக்க சென்ற 9-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ஆத்திக்குளத்தை சேர்ந்த அஜய் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை காரணமாக தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றார்.நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.