Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: 95% வெற்றியை எட்டிய ஃ பைசர் தடுப்பு மருந்து …!!

95% வெற்றியை எட்டிய ஃ சைபர் கொரோனா தடுப்பு மருந்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது உலகிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏறத்தாள 11 மாதங்களாக கொரோனாவால் அனைவரும் அல்லல்பட்டு வரும் நேரத்தில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது ஒன்றே தீர்வு என்று ஆன நிலையில் பலவிதமான சோதனைகள் நடந்து வந்தன.ஜெர்மனியின் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து முதற்கட்ட ஆய்வில் 92% பலனை கொடுத்திருப்பதாக கடந்த வாரத்தில் ஃ பைசர் நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது 95% பலன் அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 170 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிகிச்சையின் முழு பலனை அளிப்பது தெரிய வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கனவே அமெரிக்காவின் மார்டனா நிறுவனத்தின் தடுப்பு மருந்தும் 95% பலன் தருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஃ பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தும் 95% சதவீதம் பயனளிக்கின்றது என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்த தடுப்பு மருந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 94 சதவீதம் அளவிற்கு பலன் அளிப்பதாக ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |