Categories
டெக்னாலஜி பல்சுவை

எச்சரிக்கை…!! கடன் கொடுத்த பிறகு அடாவடி…. 5 செயலிகள் ப்ளே ஸ்டோரில் நீக்கம்…. கூகுள் நிறுவனம் அதிரடி…!!

அரசு அங்கீகாரம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கி வந்த செயலிகள் அதிரடியாக ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வீட்டுக் கடன் தனிநபர் கடன் வாகன கடன் என பலவகைகளில் கடன்கள் கொடுக்கின்றது. ஆனால் கடன் பெறுபவர்கள் அதற்கான ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் தற்போது ஒருவரின் KYCயை அடிப்படையாக வைத்து அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் டிஜிட்டல் மூலமாக கடன் கொடுக்கிறது. சமீபகாலமாக ப்ளே ஸ்டோரில் இது போன்ற செயலிகள் உலாவி வருகின்றது.

இந்த செயலிகளை நம்பி கடன் வாங்கியவர்களை செயலி நிறுவனங்கள் அடாவடியாக நடத்துவதாக இணையத்தில் பல புகார்கள் வருகின்றன. இதுகுறித்து நிதி சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், “ஊரடங்கு காலத்தில் தான் இந்த செயலிகள் மூலமாக கடன் வாங்குவது அதிகரித்து உள்ளது. இந்த செயலிகளின் பெயர் டிஜிட்டல் பரிவர்த்தனையில் கோல் ஊன்றி இருக்கும் மிகச் சிறந்த நிறுவனங்களின் பெயரை போன்றே இருப்பதால் எளிதாக மக்கள் சிக்கி விடுகின்றனர்.

இதுபோன்ற செயலிகளை 10 லட்சம் பேர் வரை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி உள்ளனர் இந்த செயலிகளை ஆராய்ந்தால் அது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை. அலிபாபா என்னும் சீன நிறுவனத்தின் கீழ் தான் இந்த செயலிகள் இயங்குகின்றது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியாக கூட இது இருந்திருக்கக்கூடும் என கூறுகிறார். “பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் முதன்மைக் கொள்கை. எனவே அதிக கவனத்தை நிதி சேவை சார்ந்த கொள்கைகளில் செலுத்துகிறோம்.

அத்து மீறி நடப்பவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூகுள் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல செயலிகளில் கடன் வாங்கி பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய செய்திகள் இணைய தளத்தில் பகிரப்படுகிறது. கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை வலுப்படுத்தினால் மட்டும் தான் அப்பாவி மக்கள் சிக்கல்களில் சிக்காமல் இருக்க முடியும் என நிதித் துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனிடையே பிளே ஸ்டோரிலிருந்து Ok Cash, Go Cash, SnapltLoan, ECash, Flip Cash என ஐந்து செயலிகளை கூகுல் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |