இன்றைய பஞ்சாங்கம்
19-11-2020, கார்த்திகை 04, வியாழக்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.59 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.
பூராடம் நட்சத்திரம் காலை 09.38 வரை பின்பு உத்திராடம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் – 19.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் மன மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபம் விலகி அன்பு பெருகும். பொலிவு சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். தொழிலில் லாபம் பெருகி இருக்கும். சுபகாரியம் உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். காரியங்கள் தடைபடும்.பகல் 3.30 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனமாக இருங்கள் அதுவே நல்லது.உத்தியோகத்தில் முயற்சிகளை தள்ளி வையுங்கள் அதுவே உத்தமம்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பகல் 3.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுங்கள். தொழிலில் மன உளைச்சல், சோர்வு தேவையில்லாத செலவுகள் உண்டாகும்.வெளியிடங்களில் வீண் வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். கவனம் வேண்டும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பணப்புழக்கம் இருக்கும். வீட்டின் தேவைகள் நிறைவேறும். உறவினர் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். நண்பர்களின் உதவியால் கடன் தொல்லை தீரும். வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும். பொன்னும் பொருளும் சேரும். குழந்தைகளின் எதிர்பார்ப்பு இருக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு தீரும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். தொழிலில் கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்யோக ரீதியில் பயணங்கள் வருமானத்தைக் கொடுக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு வீட்டில் மருத்துவ செலவும் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்து உண்டாகும்.உத்தியோகத்தில் உடன் இருந்தவர்களிடம் பணி சுமை நீங்கும். உடல்நிலையில் கவனம் வேண்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். உடன்பிறந்தவர்கள் வகையில் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழும் கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களோடு கருத்து வேறுபாடு இருக்கும். தொழிலில் எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் இருக்கும்.எந்த முயற்சியிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட வேண்டும்.உறவினர் உதவியுடன் சுபகாரிய பேச்சுக்கள் சுமுகமாக நடக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.உங்கள் முயற்சிக்கு உறவினர்களில் மூலம் ஆதரவும் உண்டாகும். சேமிப்புகள் உயரும். வருமானம் பெருகும். தொழிலில் பதவி உயர்வு உண்டாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு எதிர்பாரத வகையில் திடீர் பணவரவு இருக்கும். வீட்டில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்யோக ரீதியில் அரசு வழியில் நல்ல உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு தேவையற்ற மனஸ்தாபங்கள் தவிர்த்து குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவேண்டும். வாகனங்கள் மூலம் மின் விரயம் உண்டாகும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தெய்வ வழிபாடு உண்டாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்ச்சியை உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை இருக்கும். உறவினர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.