Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குடைமிளகாயில் … அதிரடியான ருசியில் … ஒரு ரெசிபி..!!

குடைமிளகாய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:

குடைமிளகாய்                          – 2
தக்காளி                                        – 3
பெரிய வெங்காயம்                – 1
குழம்பு மிளகாய் தூள்           – 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி                                – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்                 – 1/4 டீஸ்பூன்
கடுகு                                             – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு                    – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை                        – சிறிது
எண்ணெய்                                – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு                                             – சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் குடைமிளகாயை எடுத்து  நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு  வெங்காயம், தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.

அதன்  பின்பு  வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் வெங்காயம், உப்பு, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

மேலும் வதங்கிய தக்காளியுடன்,நறுக்கிய குடைமிளகாய், குழம்பு மிளகாய் தூள், சீரகப் பொடி சேர்த்ததும் சிறிது நீர் தெளித்து, மூடி வைத்து சில  நிமிடங்கள் வேக வைத்து இறக்கிபரிமாறினால், ருசியான  குடைமிளகாய் பொரியல் தயார்.

Categories

Tech |