Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்… விடிய விடிய வீதியில் இருந்த மக்கள்… சித்தூர் அருகே பரபரப்பு…!!!

சித்தூர் அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி விடிய விடிய வீதியில் காத்திருந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அடுத்துள்ள உப்பரபள்ளி, எல்லப் பள்ளி, கம்பள்ளி, நஞ்சம் பேட்டை, திகிலா வீதி, எஸ் டி காலனி உள்ளிட்ட 6 கிராமங்களில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கீழே உருண்டு விழுந்தன. அதுமட்டுமன்றி வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. அதனால் பீதியடைந்த பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிக்கு வந்தனர்.

நிலநடுக்கம் மீண்டும் ஏற்படும் என்ற அச்சத்தால் பொது மக்கள் எவரும் வீட்டிற்குள் செல்லாமல் விடிய விடிய வீட்டிற்கு வெளியே வீதியில் காத்திருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்களுக்கு நிலநடுக்கம் குறித்த அச்சத்தைப் போக்கினர். அதன் பிறகு இன்று காலை பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளுக்குச் சென்றனர்.

Categories

Tech |