அமெரிக்கா ராணுவம் பயன்படுத்த தயங்கிய ஒரு ஆயுதத்தை சீனா இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு அண்டை நாடாக இருந்து வந்த சீனா, சமீப காலமாக மோதல் போக்கை கையாண்டு வருகிறது. எல்லை பிரச்சனையை காரணம் காட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருவதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்த சீன படையினரை விரட்டி அடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்த ஏற்பட்ட போது இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது.
இந்திய வீரர்கள் 20 பேரும், சீன வீரர்கள் 35 பேரும் இந்த மோதலில் கொல்லப்பட்ட பின்னர் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் இரு படைகளும் பின் வாங்குவது என்று முடிவெடுத்து, அதன்படி தற்போதைய எல்லை விவகாரம் தொடர்கிறது. இந்த சூழலில்தான் தற்போது அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய வீரர்களை விரட்டி அடிப்பதற்காக வித்தியாசமான ஒரு ஆயுதத்தை சீனா பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்திய வீரர்களின் திசுக்களை சமைக்கக் கூடிய ஒரு மின்காந்த மைக்ரோவேவ் ஆயுதங்களை சீனா பயன்படுத்தியது என வெளியான செய்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இந்த ஆயுதத்தை சீனா எல்லையில் நிறுவும் பட்சத்தில் அருகில் பாதுகாப்பு பணியில் இருக்கும் இந்திய வீரர்களின் உடல் நிலை மிகுந்த பாதிப்படையும். வாந்தி எடுப்பார்கள், இதன் பின்னர் உடல் நீரின் மூலம் மூலக்கூறுகளை வெப்பமடையச் செய்யும். இதனால் உடலில் வலியை ஏற்படுத்தும் இதனால் வீரர்கள் பயந்து ஓடுவார்கள். இந்த முறையிலேயே இந்திய வீரர்களை சீன வீரர்கள் விரட்டினார்கள் என பீஜிங் நகரில் சர்வதேச படிப்புக்கான நிபுணர் ஜின் கேன்ராங் தனது மாணவர்களிடம் கூறியுள்ளார்.
சீன படைகள் மைக்ரோவேவ் ஆயுதங்களை பயன்படுத்தி இந்திய வீரர்களை சாமர்த்தியமாக விரட்டியடித்தார்கள் என அங்குள்ள ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளது உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற ஒரு ஆயுதம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவப் படையால் நிறுவப்பட்டது. ஆனாலும் மனிதர்களுக்கு எதிராக அதைப் பயன்படுத்துவதற்கு முன்பாகவே அமெரிக்க அரசு அரசியல் காரணம் காட்டி முடிவை வாபஸ் வாங்கிக் கொண்டது.
அமெரிக்காவே இந்த ஆயுதத்தை பயன்படுத்தாமல் இருந்த நிலையில் தற்போது சீனா இந்த ஆயுதத்தை முதல் முறையாக பயன்படுத்தி உள்ளது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இப்படி ஒரு ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என்று இந்திய அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.