Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான இறால் குறுமிளகு கிரேவி… செய்து பாருங்கள் …!!!

இறால் குறுமிளகு கிரேவி செய்ய தேவையான பொருள்கள் :

செய்முறை : 

முதலில் இறாலைத் தோல் நீக்கி, குடல் எடுத்து சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும்.பின்பு பெல்லாரியை நறுக்கி கொள்ளவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

அதன் பின் சின்ன வெங்காயத்தை உரித்து, அத்துடன் புதினா, மல்லி+ கறிவேப்பிலை போட்டு நன்கு அரைக்கவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும். பிறகு மிளகு, சீரகம், சோம்பு + கசகசாவை வறுத்து அரைக்கவும்.

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெல்லாரி + மிளகாய் போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு  அரைத்த குறு மிளகு சீரகம் மசாலா போட்டு நன்கு வதக்கவும். குறுமிளகு நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே மல்லி தூள் போட்டு வதக்கவும்.

பின் எலுமிச்சை சாரு + தயிர் + உப்பு போட்டு வதக்கவும். பிறகு, இறாலைப் போட்டு நன்கு வதக்கவும். இப்படியே இதனைக் கொஞ்ச நேரம் சிறுதீயில் வைத்திருந்து நன்கு வதக்கவும்.பின்பு பரிமாறவும் .

Categories

Tech |